இப்பாடப்பகுதியானது தொடக்கப்பள்ளிக்கான கலைத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கணம் கற்பித்தல் முறைமையை ஆராய்கிறது. மாணவர்கள் தாங்கள் பயின்ற இலக்கணத்தைப் பயன்படுத்திப் பயன்மிக்க நாள் பாடத்திட்டத்தைத் தயாரிப்பதற்கும் முழுமைப்பயிற்றலை மேற்கொள்வதற்கும்  வழிவகுக்கின்றது.

இப்பாடப்பகுதியானது தொடக்கப்பள்ளிக்கான தமிழ்மொழி கற்பித்தல் உத்திமுறைகள், அணுகுமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் தன்மை கொண்டுள்ளது. மாணவர்கள் நுண்மை முழுமைப் பயிற்றலை மேற்கொள்ளவும் நாள் பாடக்குறிப்பைத் தயாரிக்கவும் வழிகோலுகிறது. தொடர்ந்து பயிற்றுத்துணைப் பொருள் உருவாக்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கும். தமிழ்மொழி கற்பித்தலில் தேர்வும் மதிப்பீட்டுக் கூறுகளை அடையாளம் காணவும் வழிவகுக்கிறது.

இப்பாடப்பகுதியானது கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து அடிப்படையிலான திறன்களை வலியுறுத்துவதுடன் பல்வேறு சூழல்களில் மொழியைத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றலை மேலோங்கச் செய்கிறது. மொழியின் வளம் மாணவர்களைச் சென்றடையும் வகையில் இலக்கணக் கூறுகளான எழுத்தியல், சொல்லியல், தொடரியல் ஆகியன பயன்பாட்டு நிலையில் வலியுறுத்தப்படுகின்றது.

இப்பாடப்பகுதியானது கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து அடிப்படையிலான திறன்களை வலியுறுத்துவதுடன் பல்வேறு சூழல்களில் மொழியைத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றலை மேலோங்கச் செய்கிறது. மேலும் மொழியின் வளம் மாணவர்களைச் சென்றடையும் வகையில் சிறந்த மொழிக்கூறுகளைப் பயன்பாட்டு நிலையில் வலியுறுத்துகின்றது.

இப்பாடப்பகுதியானது தமிழ் இலக்கிய வரலாற்றினைச் சங்க காலம் முதல் தற்காலம் வரை விளக்குகிறது. மேலும், இப்பாடப்பகுதியானது மலேசிய இலக்கியத்தையும் தமிழக இலக்கியத்தையும் ஒப்பீடு செய்கிறது. விடுதலைக்கு முந்தைய மலேசிய இலக்கியத்தையும் விடுதலைக்குப் பிந்தைய இலக்கிய வளர்ச்சியையும் விவரிக்கின்றது. தவிர, 21-நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சி, வளம், இலக்கு ஆகியவற்றை மதிப்பிடுகின்றது.